இந்தியாவிலுள்ள
கேரள கோயிலில் பயங்கர வெடி விபத்து:
102 பேர் பரிதாபமாக பலி; 350 க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தியாவிலுள்ள கேரளத்தின் கொல்லம் அருகே அமைந்திருக்கும்
கோயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 102 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்
கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லம் மாவட்ட
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் புட்டிங்கல் தேவி
கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக்
கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள் வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம்.
அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கிடங்கில்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதையடுத்து, அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக
வெடித்துச் சிதறின. வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 102 பேர்
உயிரிழந்தனர். 350-க்கும்
மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
0 comments:
Post a Comment