’செய்தியாளர்களை
அறைவேன்’ மிரட்டிய
அமைச்சர்
பதவியை பறித்தார் பிரதமர்!
போர்ச்சுகல்
நாட்டை சேர்ந்த
செய்தியாளர்களின் கன்னத்தில் அறைவேன் என மிரட்டிய
அமைச்சர் ஒருவரின்
பதவியை அந்நாட்டு
பிரதமர் பறித்துள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்ச்சுகல்
இடது சாரி
கட்சியை சேர்ந்த
Joao Soares(66) என்பவர் அந்நாட்டு கலாச்சாரம்
மற்றும் பண்பாடு
துறை அமைச்சராக
பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில்,
சில தினங்களுக்கு
முன்னர் செய்தியாளர்
சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது ஆத்திரம் அடைந்த
அமைச்சர் ‘இரண்டு
செய்தியாளர்களை குறி வைத்து கன்னத்தில் அறைவேன்’
என மிரட்டியுள்ளார்.
சர்ச்சையை
ஏற்படுத்திய இவருடைய பேச்சு எதிர்க்கட்சி, பொதுமக்கள்
மற்றும் ஊடகங்கள்
மத்தியில் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எனினும்,
தான் பேசியதை
திரும்ப பெற்றுக்கொள்ள
மாட்டேன் என
அமைச்சர் கருத்து
தெரிவித்தார்.
இந்நிலையில்,
போர்ச்சுகல் பிரதமரான Antonio Costa என்பவர்
‘அமைச்சர் விடுத்த
மிரட்டலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தற்போது அவருடைய அமைச்சர் பதவி
பறிக்கப்பட்டுள்ளதாகவும்’ அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
இந்த
தகவல் அமைச்சருக்கு
தெரிவிக்கப்பட்டவுடன் அவரும் தனது
பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.‘நான் பேசியதை ஒருபோதும் திரும்ப
பெற மாட்டேன்.
ஆனால்,
நான் வகித்த
கட்சிக்கு களங்கம்
ஏற்படக்கூடாது என்பதால் பிரதமரின் முடிவை ஏற்கிறேன்’
என பேஸ்புக்கில்
தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
பதவியை இழந்துள்ள
Joao Soares, போர்ச்சுகல் நாட்டின் முன்னாள்
பிரதமர் மற்றும்
ஜனாதிபதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment