சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு


சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீன விஜயம் குறித்து ஊடகங்களுக்கு விளக்குவதற்காக கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சீன விஜயத்தின் போது, அடுத்த 20 வருடங்களில் நாட்டை முன்னேற்றும் விதம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உலக சந்தையுடன் போட்டியிடக் கூடிய பொருளாதாரம் நாட்டில் ஏற்படுத்தப்படும். இதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம்.
அதனுடன் உட்கட்டமைப்பு வசதிகள்,கல்வி உள்ளிட்ட துறைகளையும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை தவிர அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் முதலீட்டு வலயங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top