சீனாவில்
அடுத்தடுத்த வாகனங்கள் மோதல் : 11 பேர்
பலி
சீனாவின் ஜிபோ நகரில் இரண்டு பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான
வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதிக பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று, சாலையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து 2
பஸ்கள், கார்கள், மோட்டார் பைக்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகி
உள்ளது. இதற்கு பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றின் மீது ஒன்று மோதி உள்ளதாக
கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.


0 comments:
Post a Comment