சாய்ந்தமருதில் 13 ஆம் திகதி கொத்தணி முறையில்
கழிவுகளை அகற்ற நடவடிக்கை!
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நாளை மறுதினம் 13 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அன்றைய தினம் முழுவதும் எழுபது ஊழியர்களுடன் 02 கொம்பெக்டர்கள், 02 பெக்கோ இயந்திரங்கள், 09 உழவு இயந்திரங்கள்,01 லொறி என்பன ஒரே தடவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு கழிவுகள் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை ஏழு மணி தொடக்கம் குப்பைக்கழிவுகளை பொதி செய்து, தத்தம் வீடுகளுக்கு முன்னால் வைக்குமாறு சாய்ந்தமருது பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.




0 comments:
Post a Comment