ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில்
வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்

2 பேர் சுட்டுக் கொலை
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில் வன்முறை சம்பவங்களின் போது வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பிற்காக 85 ஆயிரம் ராணுவ வீரர்களும், ஏராளமான போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வன்முறை சம்பவங்களின் போது வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மரகான மைதானம் அருகே ஒரு நபர் மக்கள் கூடி இருந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுள் ஒருவர் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரம் கழித்து கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோல், பெண் ஒருவர் மீது மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்பித்துச் சென்ற அந்த பெண்னின் தலை மீது துப்பாக்கியால் சுட்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top