200 மீ., ஓட்டத்தில்
‛ஹாட்ரிக்' தங்கம் வென்றார்
ஜமைக்காவின்
உசேன் போல்ட்
ரியோ
ஒலிம்பிக்கில் 200 மீ., ஓட்டத்தில்
தங்கம் வென்று
2வது ‛ஹாட்ரிக்'
சாதனை படைத்தார்
உலகின் ‛மின்னல்
வேக மனிதன்'
உசேன் போல்ட்.
பிரேசிலின்
ரியோவில் ஒலிம்பிக்
போட்டி நடைபெறுகிறது.
இதில் ஆண்கள்
200 மீ., ஓட்டப்
பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், போட்டி
தூரத்தை 19.78 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
இதன்
மூலம் ஒலிம்பிக்
200 மீ., ஓட்டத்தில்,
தொடர்ச்சியாக 3 தங்கம் வென்று ‛ஹாட்ரிக்' சாதனை
படைத்தார். முன்னதாக 100 மீ., ஓட்டத்திலும் போல்ட்
‛ஹாட்ரிக்' சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இது ஒலிம்பிக்கில் போல்ட் வெல்லும்
8வது தங்கப்பதக்கம்.
பீஜிங்,
லண்டன் ஒலிம்பிக்கில்
100 மீ, 200 மீ மற்றும் 4*400 மீ., ஓட்டத்தில்
தங்கம் வென்றிருந்த
போல்ட், ரியோ
ஒலிம்பிக்கின் 100மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று
‛ஹாட்ரிக்' சாதனை படைத்தார். தற்போது 200 மீ.,
ஓட்டத்திலும் தங்கம் வென்று 2வது ‛ஹாட்ரிக்'
சாதனை படைத்துள்ளார்.
இரண்டாவதாக
வந்த கனடாவின்
ஆன்ட்ரி டி
கிராசி(20.02 வினாடி) வெள்ளி பதக்கத்தையும், 3வது
வந்து பிரான்சின்
கிறிஸ்டோப் லிமைட்ரி(20.12 வினாடி) வெண்கலப் பதக்கத்தையும்
கைப்பற்றினர்.
0 comments:
Post a Comment