நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) இன்று திங்கட்கிழமை, சமுகமளித்து வாக்குமூலமளித்த. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், இன்று திங்கட்கிழமை (15) நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தார். கைதுசெய்யப்பட்ட நாமல் எம்.பியை நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment