துருக்கியில் காவல்துறை தலைமையகத்தை

குறிவைத்து கார் குண்டு தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு

துருக்கியில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வான் என்ற இடத்தில் உள்ள பொலிஸ் ஸ்டேசனை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு ஒன்றில், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு பொது மக்கள் பலியானார்கள். 20 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், ஈலாஜிக் என்ற நகரில் பொலிஸ் தலைமையகத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது என  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top