டுபாயில் அதிநவீன செயற்கை மழைக்காடு கடற்கரை
அடங்கிய அதி நவீன ஹொட்டல்
டுபாயில்
முதன் முறையாக செயற்கை மழைக்காடு மற்றும் கடற்கரையுடன் கூடிய ஹொட்டல் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது.
வளைகுடா
நாடுகளில் ஒன்றான
டுபாய் பாலைவன
பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது.
அவை தவிர
மற்ற வளங்கள்
இல்லை. வனப்
பகுதிகள் கிடையாது.
எனவே,
சுற்றுலா பயணிகளையும்
பொதுமக்களையும் கவரும் வகையில் அதி நவீன ஹொட்டல் கட்டப்பட்டு
வருகிறது. அதில்
மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும்
நீச்சல் குளம்,
மூடுபனி போன்றவைகள்
செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஹொட்ட லுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன. இங்கு கட்டப்படும் ஹொட்டல்
5 நட்சத்திர அந்தஸ்து கொண்டது.
75 ஆயிரம்
சதுர அடி
கொண்ட ஹொட்டலை
உலக புகழ்பெற்ற
ஹில்டன் பிராண்டு
குயுரியோ நிறுவனம்
நடத்த உள்ளது.
அதில் அமைக்கப்படும்
மழைக்காடு பார்வையாளர்களை
நிச்சயம் கவரும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹொட்டல் எதிர்வரும் 2018-ம் ஆண்டு திறக்கப்பட
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment