துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு
விண்ணப்பித்திருக்கும்
முதுநிலை பட்டதாரிகள்!
எமது அண்டை நாடான இந்தியாவில் கான்பூர் மாநகர சபையில் கழிவறை சுத்தம் செய்வது உள்ளிட்ட
துப்புரவு பணிகளுக்கு
முதுநிலை பட்டதாரிகள், இளநிலைப்பட்டதாரிகள் உட்பட 5 லட்சம் பேர்விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பம்
செய்துள்ளவர்களில் 90 சதவீதம் பட்டதாரிகள்,10
சதவீதம் முதுநிலை
பட்டதாரிகள் ஆவர். 3,275 வெற்றிடங்களுக்கு இவ்வாறு இப்பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
இப்படி கல்வியியலாளர்கள் விண்ணப்பித்திருப்பது கல்வி உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பணியிடத்துக்கு கல்வித் தகுதியே தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment