தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி
கொழும்பு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ் பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று 8 ஆம் திகதி (திங்கட்கிழமை)  காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், 1983 முதல் 2012 ஆண்டு வரை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் கொலையுண்ட அரசியல் கைதிகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் படுகொலை செய்யப்பட்ட டில்ரூக்ஷனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரியும் வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று 8 ஆம் திகதி (திங்கட்கிழமை) யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்து.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுநல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய், பழிவாங்காதே பழிவாங்கதே அரசியல் கைதிகளை பழிவாங்காதே, இராணுவத்தினை வெளியேற்று, தாமதிக்காதே தாமதிக்காதே கைதிகளை உடன் விடுதலை செய்போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாக்சீச லெனினிச கட்சியின்தலைவர் சி. செந்தில்வேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, தமது விடுதலையை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) காலை முதல் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top