மூன்று தினங்கள் இறைச்சிகளை கொள்வனவு செய்ய
வேண்டாம்
மிருக வைத்தியர்கள்
சங்கம் அறிவிப்பு
வெளிநகர்ப்
பகுதிகளிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் இறைச்சிகளை,
எதிர்வரும் மூன்று தினங்களுக்குக் யாரும் கொள்வனவு
செய்ய வேண்டாமென
மிருக வைத்தியர்கள்
சங்கம் அறிவித்துள்ளது.
மிருக
வைத்தியர்களினால் குறித்த இறைச்சிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படாமையால், இறைச்சிகளைக் கொள்வனவு
செய்வதை மக்கள்
தவிர்க்குமாறு மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிருக
வைத்தியர்கள், இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து
48 மணி நேரப்
பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதன்
நிமித்தம், கொழும்புக்குக் கொண்டு வரப்படுகின்ற இறைச்சிகள்,
எதிர்வரும் மூன்று தினங்களுக்குப் பரிசோதனைக்குட்படுத்தப்பட மாட்டாதென மிருக
வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி குமார
தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment