அஹமத் முனவ்வரின் நூல் வெளியீடும்
உலமாக்களுக்குபொற்கிழிவழங்கி

 பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்

 (எம்.எஸ்.எம்.சாஹிர்)


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஷட். அஹமட் முனவ்வர் எழுதியஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும்  நூல் வெளியீடும் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தஃவா பணி புரிந்தவர்களான  உலமாக்களுக்குபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இம்மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு - 07இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீல் (நளீமி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாராளுமன்ற பிரதம கொரடாவுமான கயந்த கருணாதிலக கலந்து கொள்கிறார்.
நூலின் முதற்பிரதியை மூஷான் இன்டர்நெஷனல் தலைவர், முஸ்லிம் ஸலாஹுதீன் பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்வில், “ஊடகமும் முஸ்லிம்களும்எனும் தலைப்பில் கொழும்பு கோட்டே ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தவுள்ளார்.
விழாவின் கௌரவ அதிதிகளாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன், மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச். ஹலீம்தேசிய ஒருங்கிணைப்பு உரையாடல் அமைச்சர் மனோ கணேஷன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர்ரஹ்மான், கொழும்பு மாவட்ட முன்னாள் மேயர் .ஜே.எம். முஸம்மில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விசேட அதிதியாக மலேசிய டீ.டீ. இன்டர் நெஷனல்  பணிப்பாளர் அஷ்ஷெய்க் மௌலானா முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் சிங்கப்பூர் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பொது உறவுகள் மற்றும் வணிக ஆலோசகருமான செயிட் ஜஹாங்கீர் மற்றும் தமிழ் நாடு, சென்னையிலுள்ள ஹாஜரா ட்ரேடர்ஸ் உரிமையாளரான எம்.எஸ். றஹ்மதுல்லாஹ் ஆலிம் இப்னு சம்சுதீன் ஆலிம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் விசேட பேச்சாளரை அறிமுகம் செய்வதோடு, நூல் நயவுரையை - அட்டுளுகம, அல்- கஸ்ஸாலி மத்திய கல்லூரி அதிபர் அஷ்செய்க் எம்.ஜே.எம். மன்சூர் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.
பிஞ்சுமனம்சிறுவர் நிகழ்ச்சிவாயிலாக வானொலியில் கால் பதித்த அஹ்மத் முனவ்வரின் ஊடகப் பணி விரிவாகி - விசாலமடைந்ததினால் அவர் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகவும் பதவியேற்றார்.
எல்லாத் துறை சார்ந்தோரின் நட்பும் இவருக்கு இருக்கிறது. அதனால்தான் ஊடகத்துறைக்கு அப்பாற் சென்று சமுதாய தாக்கத்துக்குரிய பல நிகழ்வுகளை இவரால் சிறப்பாக நடத்த முடிந்தது. கல்வித்துறையில் நம் சந்ததியினர் மேலோங்கவும் சமுதாய விழிப்புணர்வை காணவும் இவர் முன்னின்று நடத்திய நிகழ்வுகள் எல்லாமே மெச்சுக்குரியவைகளே!
வெளிவரவிருக்கும் இவரதுஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும் நூல் முஸ்லிம் சேவையின் வரலாற்றுப் பின்னணியை இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்துகிறது. உலமாக்களை, அறிஞர்களை, மூத்தோரை நம் இளையோரை கண்ணியப்படுத்தி கௌரவப்படுத்தும் இவரது பங்களிப்புகள் எவரையும் ஈர்க்கக் கூடியவைகளே!
இவ்விழாவில், கௌரவிக்கப்படும் உலமாக்கள் முறையே  வெலிகம - மௌலவி ஜமாலியா செய்யத் ஹாரிஸ் மௌலானா, கொழும்புமௌலவி எம்.எம். .முபாரக், நாவலப்பிட்டிய - எம்.கியூ. புர்கானுதீன் அஹமத், நீர் கொழும்பு - மௌலவி எம்.சி. ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், சம்மாந்துறை - மௌலவி .சி..எம். புஹாரி, கள் - எலிய - மௌலவி .எல்.அலியார், மக்கொன - மௌலவி எம்.ஆர்.எம். நிஷாம், கொழும்பு - மௌலவி யூசுப் நஜிமுடீன், கொழும்பு - காதிபுல் குலபா மௌலவி ஜே.அப்துல் ஹமீட், கஹடோவிட மௌலவி எம்.இஷட்.எம். ஹுசைன், உயன்வத்த - மௌலவி முக்தார் . செய்னுடீன், மல்வானை - மௌலவி எம்.எச்.எம். லாபீர், தெஹிவளை - மௌலவி .ஆர்.அப்துல் றஸ்ஸாக், கஹடோவிட - மௌலவி எம்.என்.எம். இஜ்லான், திஹாரிய - மௌலவி எம்.ஆர்.எம். மஹ்ரூப், கொழும்பு - மௌலவி எம்.. அப்துல் ஜப்பார், தெஹிவளை - மௌலவி எஸ்.எம்.ஆரிப், கள் - எலிய - மௌலவி எம்.வை.எம். ஜாபீர், கலாவெவ - மௌலவி ஜே.எல். சலாஹுதீன், மொரட்டுவ - மௌலவி ஜே. மீராமுஹைதீன், கஹடோவிட - மௌலவி ..எம். அப்துல் சலாம், சாய்ந்தமருது - மௌலவி .எம்.. அஸீஸ், கொழும்பு - மௌலவியா  மலீஹா சுபைர், கொழும்பு - மௌலவி எம். முஸ்னி அமீர், கஹடோவிட - மௌலவி எம்.எஸ்.எம். இஸ்மாயில், வெலிகம - மௌலவி எம்.ஆர்..எம். அஸ்ஹர், கஹட்டோவிட்ட - மௌலவி எம்.. எம்.அலவி ஆகிய உலமாக்கள் தலா 10,000 ரூபா பெறுமதியானபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

இந் நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பணிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பிரபல உலமாக்கள்இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top