கல்முனை மாநகர சபையின் புதிய அபிவிருத்தித்திட்டங்களில்

சாய்ந்தமருதில் உருப்படியான

எந்த வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை

மக்கள் கவலை தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையால் உடனடியாக ஆரம்பிக்கவிருக்கும் புதிய அபிவிருத்தித்திட்டங்களில் இச்சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சாய்ந்தமருதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உருப்படியான எந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை என சாய்ந்தமருது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது மக்களை ஏமாற்றும் ஒரு நோக்கமாக தோணாவுக்கு இரண்டாம் கட்டமாக ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. (தோணாவுக்கு 10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே ஒரு தகவலும் பரப்பபட்டிருக்கிறது  )
இதோ கல்முனை மாநகரசபையின் புதிய அபிவிருத்தித்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கும் பொருட்டு  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,
மருதமுனை பொது நூலகத்தில் மாநாட்டு மண்டபம்  அமைப்பதற்காக 6 கோடியே 90 இலட்சம் ரூபா.
கல்முனை .ஆர்.மன்சூர் பொதுநூலக புனரமைப்புக்காக 3 கோடியே 25 இலட்சம் ரூபா.
கல்முனை பொதுச்சந்தை புனரமைப்புக்காக 2 கோடியே 60 இலட்சம் ரூபா.
கல்முனை சந்தாங்;கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணப்பணியை பூர்த்திசெய்வதற்காக ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா.
நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபா.
சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகரசபையின் புதிய அபிவிருத்தித்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கும் பொருட்டு  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளதாகவும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, தெரிவித்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top