ஆப்கானின்
நம்பிக்கை நட்சத்திரம்
கிமியா யூசூபி
ரியோ டி ஜெனிரோ நகரில் துவங்கிய ஒலிம்பிக் போட்டியில், ஆப்கன்
சார்பில் கலந்து கொண்ட வீரர்களில் ஒரு பெண் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
ஆப்கன் கொடியை ஏந்தி வந்த கிமியா யூசூபி (20) என்ற தடகள
வீராங்கனை, தனது இளம் வயதில், ஈரானுக்கு அகதியாக சென்றார். அங்கு அவரது திறமையை வெளிப்படுத்த
போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஈரானிய தடகள வீராங்கனையுடன் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
ஆப்கன் அகதிகளுக்கு ஈரான் சார்பில் தடகள போட்டிகளில் பங்கேற்க
தடை விதிக்கப்பட்டிருந்ததை இதற்கு காரணம். யூசூபிக்கு 17 வயதான போது, அவரின் திறமையை
ஆப்கன் அரசு கண்டு கொண்டது. தங்கள் நாட்டிற்கு அழைத்து வந்து, யூசூபிக்கு மூன்று வருடம்
நன்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்று வருட பயிற்சிக்கு பின்னர், இவ்வருடம் நடந்த தெற்காசிய
விளையாட்டு போட்டியில் யூசூபி கலந்து கொண்டார். இந்த தொடரில், இவரின் திறமை பலரையும்
கவர்ந்தது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில், ஆப்கன் தேசிய கொடியை ஏந்தி செல்லும்
வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
பதக்க வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும், எங்களது நாட்டில்
பல பிரச்னைகள் இருந்தாலும், அதனையும் தாண்டி எங்களாலும் திறமையை நிருபிக்க முடியும்
என்பதை வெளிப்படத்துவதே தனது லட்சியம் என்கிறார் கிமியா யூசூபி.
0 comments:
Post a Comment