கொரிய அரசாங்கம் பலத்த வரவேற்பு வழங்கியதாம்
பெருமை கொண்ட மஹிந்த!

தாம் கொரியாவை சென்றடைந்த போது கொரிய அரசாங்கம் பலத்த வரவேற்பு வழங்கியது. அந்நாட்டின் முக்கிய நகர சபைத் தலைவர் ஒருவர் இரவு விருந்துபசாரமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, தொலைபேசி ஊடாக கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான் பதவியில் இருந்த காலத்தைப் போன்றே கொரிய மக்கள் என்னை வரவேற்றனர். கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ள சனத் நிசாந்த சுதந்திரக் கட்சிக்காக உயிர் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது கடமையாற்றியவர்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கினர். உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு பழி வாங்குவதனால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதேவேளை, சுதந்திரக் கட்சி இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் குடும்பம் நடத்துகின்றது என மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top