ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அஷ்ரப்
அல்குர்ஆன் ஆய்வு மையம் நடத்தும் கிராஅத் போட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடத்தும் கிராஅத் போட்டி ஆகஸ்ட் மாதம் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்.
1.
20 வயதிற்கு கீழ்பட்ட பெண்களுக்கான போட்டி
2.
20 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான போட்டி
3.
20 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டி
4.
20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி
5.
சர்வதேச மட்ட கிராஅத் போட்டிகளில் கலந்து கொண்ட காரிஆக்களுக்கான போட்டி
6.
சர்வதேச மட்ட கிராஅத் போட்டிகளில் கலந்து கொண்ட காரிகளுக்கான போட்டி
• போட்டியாளர்கள் அல்குர்ஆனை நடுவர்களால் வழங்கப்படும் இடத்திலிருந்து தஜ்வீத் சட்டங்களைப் பேணி கிராஅத் முறையில் பார்த்து ஓத வேண்டும்.
•
1996.08.26 திகதிற்கு முன்னர் பிறந்தவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
• வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை அல்லது பிறப்புச்சான்றிதழை கொண்டு வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
• சர்வதேச மட்ட கிராஅத் போட்டிகளில் பங்குபற்றிய விண்ணப்பதாரிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் தொலைபேசி இலக்கம் 0112436752த் தொடர்பு கொள்ளவும்.
• விதிமுறைகளை மீறுபவர்கள் போட்டியிலிருந்து நிராகரிக்கப்படுவர். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
• பெண்களுக்கான அனைத்து போட்டிகளும் ஆகஸ்ட் மாதம் 27 சனிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.
• ஆண்களுக்கான அனைத்து போட்டிகளும் ஆகஸ்ட் மாதம் 28 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெறும்என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment