சாய்ந்தமருதில் நடைபெற்று முடிந்த
"வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டம்
சாய்ந்தமருதில் இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற "வீட்டுக்கு
வீடு மரம்" செயற்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
"வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டம் வைபவத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தார்.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆரிப்
சம்சுதீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை
மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.பி. பஷீர்,எம்.ஐ.எம்.பிர்தெளஸ், ஏ.ஆர்.பறக்கத்துள்ளா,
சாய்ந்தமருது-மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனிபா, மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா,
அட்டாளைச்சேனை பளீல், மன்சூர் ஏ.காதர்,சாய்ந்தமருது பள்ளிவாசல் மரைக்காயர் சபை சார்பாக
மெளலவி யூ.எல்.எம்.காஸீம், எம்.ஐ.ஏ.மஜீத் உட்பட பலரும் கலந்து கொண்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.










0 comments:
Post a Comment