நாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்ட 14 பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்
இன, மதவாதங்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிடுவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் பலர் தொடர்பிலும், சமூக வலைத்தளங்கள் குறித்தும் விசேட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுவோர் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் இரு முஸ்லிம்களும், தமிழர் ஒருவரும், பிக்கு ஒருவர் உட்பட பௌத்தர்களும் காணப்படுகின்றனர். பொலிஸ் அதிகாரியொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment