பொதுபல சேனாவின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் என்பன குறித்து சிங்கள பெளத்த மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் காப்பாற்றவில்லையெனவும் அமைச்சர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென அமைச்சரிடம் வினவப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் விடயத்தில் பெளத்த மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதேபோல் பிரதான தேரர்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் கிடையாது. பெளத்த கொள்கையை பின்பற்றி வாழும் தேரராகவுள்ள அவர், அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் அமைச்சர் நேற்று 18 ஆம் திகதி ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment