மக்கள் வங்கியில் பணியாற்றி மோசடி செய்த
பல்கலைக்கழகம் செல்லவிருந்த யுவதிக்கு
18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
பல்கலைக்கழகம் செல்லும் வரையில் மக்கள் வங்கி கிளையில் பணியாற்றி பண மோசடி செய்த யுவதி ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவியருக்கு மக்கள் வங்கியில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படுகின்றது.
இவ்வாறு மக்கள் வங்கியில் பணிக்கு சென்ற யுவதி ஒருவர் சுமார் முப்பது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த யுவதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நிமால் ரணவீர 18 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்ததுடன், 90 இலட்ச ரூபா நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை பெந்திவௌ ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தனி அபேசூரிய என்ற யுவதிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு உதவிய அவரது சகோதரரான இந்துனில் சமன் குமாரவிற்கும் 18 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் நிதியை மோசடியான முறையில் கையாடல் செய்துள்ளதாக இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய குறித்த யுவதி 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment