வசீம் தாஜுதீன் கொலை!
ஒரு வருட த்திற்குப் பின்னர் அனுர பிணையில் விடுதலை
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம், இன்று 2ஆம் திகதி பிணை வழங்கியுள்ளது.
அவரை, 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மணிலால் வைத்தியதிலக,அனுமதித்தார்..
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தார்.
தாஜுதீன் படுகொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு
விசாரணைகளுக்காக சென்றிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி
இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment