பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள
விடுதி மற்றும் சூதாட்ட
விடுதி தாக்குதல்:
பலி எண்ணிக்கை 36-ஆனது
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விடுதி மற்றும்
சூதாட்ட விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 36 பேர்
உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்கு தடை விதித்துள்ளனர். மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைட் புலனாய்வு குழுவின் தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் லோன்வோல்ஃப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது. தாக்குதலில் இதுவரை மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த தாக்குதல் விடுதியை கொள்ளையடிக்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் தானும், சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதியில் தீப்பிடித்து எரிந்த பதற்றத்தில் அதனுள் இருந்தவர்கள் அவசர அவசரமாக தப்பியோட முயன்றதாலேயே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment