ஞானசார தேரர் விரைவில் கைது!
4 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையாம்!!
நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இனம், மதம், அரசியல் என்பனவற்றைப் பார்ப்பதில்லையெனவும், யாராயிருப்பினும் தராதரம் பார்க்காமல் கைது செய்வோம் எனவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டம் யாருக்கும் சமமானது. சில இடங்களில் நாம் நடவடிக்கை எடுக்கவில்லையென பேசப்படுகின்றது. நாம் ஞானசார தேரரை விரைவில் கைது செய்வோம். இதற்காக வேண்டி 4 பொலிஸ் குழுக்கள் இயக்கி விடப்பட்டுள்ளன. இது விசேடமான ஒரு விடயமல்ல. இதனை யாருக்கும் தொல்லைகொடுக்கும் செயலாகவும் பார்க்க வேண்டாம் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment