கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்
பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை கலைப்பு
(அபூ முஜாஹித்)
கல்முனை
ஸாஹிறா
தேசிய பாடசாலையின்
பழைய மாணவர்
சங்க கொழும்புக் கிளை உடனடியாக
கலைக்கப்படுவதாகவும், அக் கிளையால் எடுக்கப்படும் சகல
நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதெனவும் கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலை அதிபர்
எம்.எஸ்.முஹம்மட் அறிவித்துள்ளார்.
கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்பு
கிளையின் அண்மைக்கால
நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் பாடசாலை நிருவாகத்திற்கு முரணானதாகவும்
பழைய மாணவர்
தர்மத்திற்கும் ஒவ்வாத முறையில் இருப்பதன் காரணமாக
இம்முடிவை எடுக்க
நேர்ந்ததாகவும் அதிபர் எம்.எஸ்.முஹம்மட்
தெரிவித்தார்.
ஸாஹிறா
தேசிய பாடசாலையின்
பழைய மாணவர்
ஒருவர் பாடசாலை
அதிபராக கடமையாற்றுவதை
விரும்பாத நிலையிலும்,
பாடசாலையின் கள நிலவரம் தெரியாது கொழும்பில்
இருந்து கொண்டு
இணையத்தளங்கள் மூலமாக நிருவாகத்திற்கு சேறு பூசும்
செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலையின்
அபிவிருத்திக்காவும், நன்மைக்காகவும் உழைக்க விரும்பும் கொழும்பு வாழ்
பழைய மாணவர்கள்
தம்முடன் நேரடியாக
தொடர்பு கொள்ளுமாறும்
அதிபர் முஹம்மட்
கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment