கொலம்பியா
நாட்டில் காலி
நகரில் உள்ள
ஆஸ்பத்திரியின் 6-வது மாடியில் இருந்து நர்ஸ்
தவறி விழுந்ததில்
டாக்டர் பலியானர்.
கொலம்பியா
நாட்டில் காலி
நகரில் டெல்வாலி
பல்கலைக்கழக ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள 6-வது
மாடியில் பயிற்சி
நர்ஸ் மரியா
இசபெல் கான்
சலேஷ் பணியில்
இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென
அங்கிருந்து கீழே தவறி விழுந்தார்.
அப்போது
ஆஸ்பத்திரி வளாகத்தில் வெளியே நடந்து சென்று
கொண்டிருந்த டாக்டர் இசபெல் முபியோஷ் மீது
விழுந்தார். அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே இருவரையும்
மீட்டு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர்.
அங்கு
சிகிச்சை பலனின்றி
டாக்டர் இசபெல்
முபியோஷ் பரிதாபமாக
உயிரிழந்தார். உடல் முழுவதும் எலும்பு முறிவு
ஏற்பட்ட நிலையில்
நர்ஸ் மரியா
இசபெல் உயிர்பிழைத்தார்.
அவர் ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று
வருகிறார்.
0 comments:
Post a Comment