இலங்கை -  பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு ஒன்று அடுத்த மாதம் டாக்கா பயணமாகின்றது.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு முடிவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு பிரமாண்டமான வளர்ச்சி என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் ரியாஷ் ஹமிதுல்லா சந்தித்து பேச்சு நடத்தியப்போதே அமைச்சர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக பங்களாதேஷ்க்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது மேலும் இரண்டு நாடுகளும் வர்த்தக வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். பலம் வாய்ந்த வர்த்தகம் மற்றும் வியாபார துதூக் குழு ஒன்றை பங்களாதேஷ் நாட்டுக்கு அடுத்த மாதம் அனுப்பிவைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு எனது அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பங்களாதேஷ் நாட்டுடனான வர்த்தக மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை இலங்கை எதிர்பார்த்து நிற்கின்றதுஇவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தக துதூக் குழுவை பங்களாதேஷ் வரவேற்பதாக அந்நாட்டின் துதூவர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
‘2010ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 48 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2016ம் ஆண்டு மும்மடங்காக அதாவது, 142மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்ததுஎன்று வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ்க்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக பருத்தி, பிளாஸ்டிக், துணிவகைகள், சவர்க்காரம், மசகுப் பொருட்கள் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவங்கள் என்பவற்றை குறிப்பிடமுடியும். என குறிப்பிட்ட வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி பங்களாதேஷ் நாட்டில் இருந்து மருத்துவப் பொருட்கள், கடதாசி, உருக்கு போன்றப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் நாட்டில்ல் 45 இலங்கை கம்பனிகள் 300 மில்லியன் அமெரிக்கன் டொலர் வகையிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
As the latest data showed a three-fold total trade jump with Bangladesh (including a three-fold rise in exports) Sri Lanka’s high-level talks with Bangladesh for even bigger trade and investments are now slated for next month in Dhaka.
 “Bilateral trade between the two countries tripled since 2010 but there are unexplored potentials” said Minister of Industry and Commerce Rishad Bathiudeen on 12th June. He was addressing High Commissioner of Bangladesh in Sri Lanka Riaz Hamidullah at the Ministry of Industry and Commerce. 
 “The two-way trade between Sri Lanka and Bangladesh has shown a strong growth trend. Even our exports to Bangladesh increased in the last five years” said Minister Bathiudeen and added: “To enhance trade and investment opportunities between both countries further, I have instructed my officials to plan a strong trade and business delegation to Dhaka from Sri Lanka this July. We are looking for much bigger trade and investments to Sri Lanka from Dhaka as well in the aftermath of proposed high level Business Forum to be held along with this event, which is essential for B2B links.”
 According to the Department of Commerce, total trade between both countries that was at a mere USD 48 Mn in 2010 has tripled to USD 142 Mn in 2016. The balance of trade between two countries has always been in favour of Sri Lanka.  Among Sri Lanka’s top exports to Bangladesh are Cotton, Plastics, fabrics, Soap and washing preparations, and lubricants. Sri Lanka’s exports to Bangladesh at USD 35 Mn in 2010 too tripled (to USD 112 Mn) in 2016. Among top imports from Bangladesh to Sri Lanka are medicine, textile fibre and paper yarn, steel, apparel and cotton. The USD13 Mn imports volume to Sri Lanka from B’desh in 2010 also surged to USD 39 Mn by 2016.
 “We welcome a high level Sri Lankan delegation to Dhaka” said Ambassador Hamidullah responding to Minister Bathiudeen, and added: “A high level Business Forum along with official trade talks is a great impetus for future bilateral business. The Double Taxation Avoidance treaty, can also help if necessary. We can mutually start work for larger investments-I am pleased to say that the cost of doing business in Bangladesh has significantly decreased in recent years. Already many Lankan companies have invested with us.”
  45 Lankan companies are already operating in Bangladesh at present with USD 300 Mn investment. They are active in the sectors of apparel, banking, paper, and consumer goods.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top