அமைச்சர் றிஷாட் பதியுதீன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை
விடயத்தில் சிறப்பாக செயலாற்றி
99 புள்ளிகளைப் பெற்றுள்ளார்
அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவரும் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை விடயத்தில் 99
புள்ளிகளைப் பெற்று இந்த வருடம் ஏப்ரல் மாதம் சிறப்பாக செயலாற்றியுள்ளார் என நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள
பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில்
உள்ள எம்.பிக்களில் சிறப்பாக
செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பட்டியல்
ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலிலேயே இவ்விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம்
விடயத்திலும் 54.14 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இது போன்று உரிமை மற்றும் பிரதிநிதித்துவம் விடயத்தில் 57.42 புள்ளிகளைப் பெற்று 10 ஆவது நிலையில்
உள்ளார்.
அமைச்சர்
றிஷாட் பதியுதீன் (Risad Badhiutheen, 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி
பிறந்தவர். 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக
வன்னி மாவட்டத்தில்
பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்றவர். இவர் 2010 பொதுத் தேர்தலில்,
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி சார்பில் வன்னி
மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு
செய்யப்பட்ட உறுப்பினர். இவர் கைத்தொழில், வர்த்தகத்துறை
அமைச்சராக உள்ளார்.
இவர் 2015 செப்டம்பர்
4 அன்று தொழில்
மற்றும் வணிக
அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வடக்கின்
மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவராகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
செயல்படுகின்றார்.
0 comments:
Post a Comment