திருகோணமலை பெரிய கடை ஜும்ஆ பள்ளிவாசல் மீது

இனந்தெரியாத விஷமிகளால் தீ வைப்பு

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்டுகின்றது.
குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது
இத்தீ வைப்பினால் பள்ளிவாசலுக்குள் கார்பட் மற்றும் பாய்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.
அதிகாலை மக்கள் தொழுகைக்கு வந்தபோதே இந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் இலங்கையில் சிறுபான்மையின சமூகமான முஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் மற்றம் வர்த்தக நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top