மு.கா. தலைவர் வூப் ஹக்கீம் அவர்கள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் பெயரால் இங்குள்ள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் வூப் ஹக்கீமையும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வினையும் அட்டாளைச்சேனை மக்கள் புறக்கணிப்பதுதான், அவருக்கு இப்பிரதேச மக்கள் வழங்கும் பதிலடியாக அமையும் என்றும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இதுவரையில் மூன்று தடவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாகத் வாக்குறுதி வழங்கியுள்ள வூப் ஹக்கீம் அவர்கள், இது வரையில் ந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ப் பிரதேச மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றமையானது, பிரதேச மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும் எனவும், அட்டாளைச்சேனைப் பிரதேச புத்திஜீவிகள் கூறுகின்றனர்.
கலிமாச் சொன்ன வாயால் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கிவிட்டு தம்மை தொடர்ந்தும் 15 வருடங்களாக ஏமாற்றி வரும் ஒரு நபரின் பின்னால்ஒரு மக்கள் கூட்டம் எதுவித சொரணையுமற்று அலையுமாயின், அந்த மக்கள் கூட்டத்தை தமிழகத்திலுள்ள நடிகர்களுக்குப் பின்னால் சென்று வாக்களிக்கும் மக்களைப் போன்று பரிதாபத்துக்குரியவர்களாகவே பார்க்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அட்டாளைச்சேனை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியிருக்கும் வூப் ஹக்கீம் நாளைய தினம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை புறக்கணிப்பதன் மூலம், அட்டாளைச்சேனை மக்களும் மானமுள்ளவர்கள்தான் என்பதை, நிரூபிக்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top