மு.கா.கட்சிக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்ட போதுதான் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் அன்று கிடைத்தது.
அது போன்று சாய்ந்தமருது மக்களின் மற்றொரு
பிரதான அபிலாசையான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றுக்கும் மு.கா.கட்சிக்கும் அதன் தலைமைகளுக்கும் இக்கட்டான நிலை ஏற்படும் வரை சாய்ந்தமருது மக்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
கல்முனைப் பிரதேசத்திலிருந்து மயோன் முஸ்தபா அவர்கள் அன்று தேர்தலில் குதித்து கட்சிக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்ட போதுதான் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் கிடைத்தது என்பதை சாய்ந்தமருது மக்கள் மறந்து விடமுடியாது.
மீண்டும் அப்படி ஒரு இக்கட்டான நிலை மு.கா கட்சிக்கும் தலைமைகளுக்கும் ஏற்படும் வரை சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றத்திற்காக காத்திருக்கத்தான் வேண்டும் போல் தெரிகின்றது என விடயம் தெரிந்த மக்கள்
அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்..
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளினால் விரும்பி வழங்கப்பட்ட ஒன்றல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரு சம்பவத்தை எம்மால் கூற முடியும். (முழக்கம் மஜீத் அவர்கள் சாட்சி)
சாய்ந்தமருதில் உள்ள பிரமுகர்களில் 40 பேருக்கும் கூடுதலான எண்ணிக்கை கொண்டவர்கள் மர்ஹும் அஷ்ரப் அவர்களை சாய்ந்தமருது பிரதேச செயலகம் விடயமாக அன்னாரின் கல்முனைக் காரியாலயத்தில் சந்தித்தனர்.
இவ்வாறு சந்தித்தவர்களை இணிப்பு பாணங்கள் வழங்கி நன்கு ஆதரித்துவிட்டு இன்று சாய்ந்தமருதில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளேன் அதில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவேன் எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் எந்த விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தில் சாய்ந்தமருது சென்ரல் கமிட்டி (மத்திய குழு) மூலமாகவே என்னிடம் வாருங்கள் என்ற வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் ஊர் சார்பாக சென்றிருந்தவர்களில் ஒருவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களைப் பார்த்து உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க முடியுமா? என அன்னாரிடம் அனுமதி பெற்று உங்களின் சாய்ந்தமருது சென்ரல் கமிட்டி என்பவர்கள் யார்? இதன் காரியாலயம் எங்கிருக்கிறது ? என்று கேட்டவுடன் மர்ஹும் அஷ்ரப் பக்கத்தில் இருந்த முழக்கம் மஜீத் அவர்களிடம் காதுக்குள் ஏதோ பேசினார்.
பின்னர் மர்ஹும் அஷ்ரப் அந்தக் கேள்விகளுக்கு, எமது சென்ரல் கமிட்டி தலைவராக புர்க்கான் அவர்கள் இருக்கிறார்.. எங்களுக்கு தற்போதைக்கு சாய்ந்தமருதில் காரியாலயம் இல்லை என்ற பதில்களை வழங்கினார் சந்திக்கச் சென்றவர்கள்
ஸலவாத்துச் சொல்லி சந்திப்பை முடித்துவிட்டு திரும்பினார்கள்.
பின்னர், அன்று மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் சாய்ந்த்மருது, மாளிகைக்காடு இணைந்த ஒரு பிரதேச செயலகத்தையே நான் கனவு காண்கின்றேன் என்று இதற்கான பல விளக்கம்களை எடுத்து வைத்து மர்ஹும் அஷ்ரப் பேசினார்.
அன்னாரின் இப்பேச்சைக் கேட்ட மக்கள் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் கிடைக்க மாட்டாது, கிடைக்கப் போவதுமில்லை என்று புரிந்துவிட்டார்கள். அதன் காரணத்தினால் பொதுத்தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் மு.கா. கட்சிக்கு எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.
சாய்ந்தமருது மக்கள் மு.கா.க்கு எதிராகச் செயல்பட்டு மயோன் முஸ்தபா அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு முனைகின்றார்கள். மயோன் முஸ்தபா அவர்கள்கூடசாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் கிடைக்காததை தனது அரசியலுக்கு சாதகமாகப் பயண்படுத்தி வருகின்றார் என்பதும் மர்ஹும் றிஸ்வி சின்னலெவ்வை அவர்களுக்கு தெரியவந்தது.
இதனைத் தடுப்பதாக இருந்தால் சாய்ந்தமருதுக்கு உடனடியாக தனியான பிரதேச செயலகம் வழங்கியாக வேண்டும் என்று திடமாகக் கருதிய மர்ஹும் றிஸ்வி சின்னலெவ்வை தேர்தலில்
வெற்றிகொள்ளும் தந்திர உபாயகமாக அதனை மர்ஹும் அஷ்ரப் அவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இதனடிப்படையில் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நடவடிக்கைகளை நோக்கும் போது மக்களின் கோரிக்கைக்கும் தேவைக்கும் அல்லாமல் அரசியலில் வெற்றி பெறும் ஒரே நோக்கம் கருதி அன்று வழங்கப்பட்டதே சாய்ந்தமருது பிரதேச செய்லகம் என்பது மக்களுக்கு புரிய வேண்டும்.
இதே போன்று ஒரு இக்கட்டான நிலை சாய்ந்தமருதில் மு.கா கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் ஏற்படும் வரை சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றுக்கு காத்திருக்கத்தான் வேண்டும். யார் அந்த இக்கட்டான நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள்? வாக்களிக்க வேண்டிய சாய்ந்தமருது
மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
0 comments:
Post a Comment