இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

அமைச்சர் றிஷாட் பதியுதீன்

சமையல் பாத்திரங்களை வழங்கி உதவினார்

இரத்தினபுரியில் வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று 3 ஆம் திகதி பார்வையிடச் சென்றபோது இரத்தினபுரி ஸ்ரீ சுமணாராம விகாரையில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிவாரணப்பொருட்கள் மற்றும் சமையலறை உபகரணங்களையும் வழங்கினார்.
 .
இன்றுஇப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து விபரங்களையும், சேத விபரங்களையும் அங்கு கோரியதுடன் மீள் கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.


இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பா. விஜயதுங்க, அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மாலினி பொதேஹம மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவருமான .ஏம் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்; அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







Add caption





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top