கல்முனை சாஹிறா கல்லூரியின் முன்னாள் தற்காலிக அதிபர்

திரு.பதுர்தீன்  மீண்டும் வலயக்கல்வி அலுவலகத்தில் 

கடமையேற்றமையினால் அமைச்சின் தற்காலிக

அதிபர் நியமனக்கடிதம் செயலிழந்தது

(அபூ முஜாஹித்)

கல்முனை சாஹிறாக்கல்லூரிக்கு தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்ட திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் மீளவும் கடமையேற்றுக் கொண்டதன் மூலம் சாஹிறா கல்லூரியின் தற்காலிக கடமை பார்க்கும் அதிபராக அவரை நியமித்து இசுறுபாய கல்வி அமைச்சின் கடந்த வருடம் ஆகஸ்ட் 05ம் திகதி வழங்கிய கடிதம் செல்லுபடியற்றதாகிவிட்டது எனவும், அக்கடிதத்தின் அடிப்படையில் அவர் ஒரு போதும் கல்முனை சாஹிறா கல்லூரியின் அதிபராக நியமனம் செய்யப்பட முடியாது எனவும் கல்வித்துறை விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கல்முனை சாஹிறாக்கல்லூரிக்கு 2014ம் ஆண்டு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரால் 03 மாதங்களுக்கு தற்காலிகமாக கலகமடக்கும் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. பதுர்தீன் 03 வருடங்களாக தன்னை நிரந்தர அதிபராகக அல்லது முறைப்படி விடுவிக்கப்பட்ட அதிபராக நியமனத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத நிலையில் இலங்கை கல்வி நிருவாக சேவை கிழக்கு மாகாண அதிகாரிகள் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடடொன்றில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு தேசிய பாடசாலை ஒன்றிற்கு அதிபராக எவரையும் நியமிப்பதற்கான அதிகாரமில்லை என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இவருக்கு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கையை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் இசுறுபாய கல்வி அமைச்சு 2016.08.05ம் திகதியிட்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியை எதிர்பார்த்து தற்காலிக அதிபர் நியமனத்தை வழங்கியது.
இதன் பின்னர் இவர் மாகாண அரச சேவைக்குரியவர் என்பதனால் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு உடனடியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கடமையேற்குமாறு உத்தரவிட்டதற்கமைய கடந்த 03.04.2017ம் திகதியன்று கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் கல்முனை சாஹிறாக் கல்லூரியின் தற்காலிக அதிபராக இருப்பதற்கான சட்டரீதியான வாய்ப்பை இழந்துவிட்டார் என்பது சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாகும்.
இந்நிலையில் இவர் கல்முனை சாஹிறாக் கல்லூரியின் தற்காலிக அதிபராக தற்போதும் தானே இருப்பதாக கல்வி அமைச்சுக்குப் பொய் கூறி தமது சம்பளத்தை கல்முனை வலயக்கல்வி அலுவலகம் வழங்கவில்லை எனவும் கூறியதற்கமையவே அவருக்கு சம்பளம் வழங்குமாறு கடிதத்தை அனுப்பியது.
இச்சந்தர்ப்பத்திலும் தான் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்றுக் கொண்டதாக கல்வியமைச்சுக்கு இவர் தெரிவிக்கவுமில்லை இவரை அதிபராக நியமிக்க வேண்டுமென ஆவலாயுள்ள கல்முனை சாஹிறா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் உண்மையை மறைத்து பழைய மாணவர்களின் தருமத்திற்கு முரணான விதத்தில் செயற்படுகின்றனர் என கல்முனை சாஹிறாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், கல்விப் பணிப்பாளருமான .எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
பழைய மாணவர்கள் எப்போதும் ஒரு பழைய மாணவர் பாடசாலையின் அதிபராக இருப்பதையே விரும்ப வேண்டும். அவரது நிருவாகத்திற்கு பழைய மாணவர்கள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமே தவிர பாடசாலையின் அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் நிருவாக விடயத்தில் தலையிடுவது சட்டவிரோதமான ஒரு  செயல் என்பதை பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளையினரும் இது விடயத்தில் மூக்கை நுழைத்துள்ளதாக அறிந்து கொண்டோம்.
மேலும், இப்பாடசாலையின் அதிபராக யார் இருக்க வேண்டும் என்பதை பாடசாலை சமூகமும், ஊர் மக்களும் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இப்பாடசாலையின் அதிபராக இருக்க வேண்டுமென ஏகமானதான தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
இதனை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். பழைய மாணவர் சங்கம் என்பது பாடசாலை நிருவாகத்திற்கு தொல்லை தரும் சங்கமாக இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் இந்தக் கொள்கையையே பின்பற்றின என்பதை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

திரு.பதுர்தீன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்றுக் கொண்ட கடிதப் பிரதி இணைக்கபட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top