கல்முனை சாஹிறாக்கல்லூரியின்
பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை
கலைக்கப்பட்டமைக்கு பெற்றார்கள் வரவேற்பு
கல்முனை
சாஹிறா தேசிய
பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக்
கிளையை கலைத்துவிட எடுக்கப்பட்ட தீர்மானம்
குறித்து கல்முனை
சாஹிறா பழைய
மாணவர்களும், ஆசிரியர்களும் இப் பிரதேச, பிரமுகர்களும் மாணவர்களின்
பெற்றோர்களும் அதிபர்
எம்.எஸ்.முஹம்மட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக
கல்முனை சாஹிறா
தேசிய பாடசாலையின்
பழைய மாணவர்
சங்க கொழும்புக்கிளை
எனக் கூறிக்கொள்ளும்
ஒரு அமைப்பு
பழைய மாணவர்
தர்மத்திற்கு முரணான வகையில் பாடசாலை அதிபரை
விமர்சிப்பதிலும், மற்றைய ஊரவர்களுக்கு
பாடசாலையைக் காட்டிக் கொடுப்பதிலும், பாடசாலைப் பெயரை
வைத்துக் கொண்டு
கொழும்பில் குளுகுளு அறைகளில் கூட்டம், கும்மாளம்,
சாப்பாடு என
பொழுது போக்குகளிலும்
ஈடுபட்டு வந்தது.
இச்சங்கத்தினால் இப்பாடசாலை நிருவாகத்திற்கு
பெரும் தலையிடியும்,
பிரச்சினைகளும் ஏற்பட்ட வண்ணமிருந்தன.
பாடசாலை
அதிபர் யார்
என தீர்மானிக்கும்
அதிகாரத்தையும் தம் கைகளில் எடுத்துக்கொண்டு கொழும்பு
சாஹிறாக் கல்லூரியைப்
போல் இப்பாடசாலையை
தனியார் பாடசாலை
என எடுத்துக் கொண்டு அக் கொழும்புக்கிளை கல்லூரியின் ஆளுனர்
சபை போன்று
செயற்பட்டு வந்தது. இதனையடுத்து அதிபர் முஹம்மட்
துணிச்சலான வகையில் கொழும்புக் கிளையை கலைக்க
எடுத்த முடிவு
காலத்தின் தேவை
குறித்து எடுத்த
முடிவாகும் என
கல்லூரி மாணவர்களின் பெற்றார்கள் பாராட்டுகின்றனர்.
0 comments:
Post a Comment