ஆட்சிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளே  இவ்வாறு காலாவதியாகவுள்ளன.
இந்தவகையில், கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாண சபையின் சபையின் ஆட்சிக் காலம் செப்டம்பர் 28 ஆம் திகதியும், வட மத்திய மாகாணத்தின் ஆட்சிக் காலம் ஓக்டோபர் 01 ஆம் திகதியும் நிறைவடையவுள்ளது.

மாகாண சபைகள் தொடர்பான தேர்தலை சட்டப்படி ஒத்திவைப்பதற்கு வாய்ப்பு இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top