மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒடுக்கமான பாலமே இது!
இப்பாலத்தின் ஊடாகத்தான் ஆஸ்பத்திரி உப தபாலகம், க/மு றியாலுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா என்பனவத்திற்கு செல்ல வேண்டும்.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
இப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இம்மாவட்டத்தின் சாரதியும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!! என்று தேர்தல் நடந்து முடிந்து வெற்றி பெற்றதும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்
.இக்கருத்தை எந்த அர்த்தத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பிட்டார்களோ தெரியாது. ஆனால், மக்களோ மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்வதற்கு இக்கருத்தை கூறியிருக்கலாம் என நம்பினர்.
எதிர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதியுடன் மக்கள் தந்துள்ள ஆணைக்கு இரண்டு வருடங்கள் முடிகின்றது என்பதையும் மக்கள் எமது பிரதிநிதிகளுக்கு நினைவுபடுத்துகின்றார்கள்.
0 comments:
Post a Comment