டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை
இன்று அரசுடமையாகின்றது
மாலபேயில்
அமைந்துள்ள டாக்டர் நெவில் பெர்னாண்டோ
தனியார் போதனா
வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த
நிகழ்வு இன்றைய
தினம் முற்பகல்
10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.
மூன்று
பில்லியன் ரூபா
பெறுமதியான நெவில் பெர்னர்ணடோ தனியார் வைத்தியசாலை,
அதன் உபகரணங்கள்,
பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்திடம்
உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த
வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது
தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து
எவ்வித கட்டணங்களையும்
பெற்றுக்கொள்ளவில்லை எனவும் வைத்தியசாலையின்
தலைவர் டாக்டர்
நெவில் பெர்னாண்டோ
ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
குறித்த நிகழ்வில்
அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய நிர்வாக சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும். நோயாளிகளுக்கு இலவசமாக வைத்திய சேவைகளை இந்த வைத்தியசாலை வழங்கும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment