பாகிஸ்தானின் புதிய பிரதமர்
நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர்
ஷேபாஸ் ஷெரீஃப்
![]() |
Shahbaz Sharif (right) with his elder brother Nawaz Sharif. |
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந் நாட்டின் இடைவெளியாகிய பதவிக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்று (29) மாலை நடைபெற்றுள்ளது. இதில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரரான ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு தேர்தல் வரும்வரை பாகிஸ்தான் பிரதமராக செயற்படுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.