தந்தையின் ஜனாஸாவில் கலந்து கொண்ட
அனைத்து உள்ளங்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்
மகள் மர்யம் நளிமுதீன்
மகன் ரஹ்மத் மன்சூர்
எனது
தந்தை எங்களை
விட்டு பிரிந்த
துயரத்தில் இருக்கும் நிலையில் அழ்ழாஹ்வின் கட்டளையின்
பிரகாரம் ஒரு
அனுகூட அசைய
முடியாது.எனது
தந்தை எங்களை
எவ்வாறு வழிகாட்டி
வளர்த்தார் என்பதை விட மக்களை நன்றாக
வளர்த்துள்ளார் என்பதே உண்மை என்பதை உணர்ந்துகொண்டேன்.எமது பிரதேசத்தின்
அரசியல் பரம்பரையில்
பிறந்த எனது
தாயை திருமணம்
செய்து என்
தந்தை எம்
மக்களுக்காக தன்னையே அர்ப்பனித்தார்.இன்ஷா அழ்ழாஹ்
என் தந்தை
விட்ட இடத்தை
என்னால் முடியுமான
அளவு என்னை
அர்ப்பனித்து எம்மக்களுக்காக செயற்படுவேன்
என்ற உறுதிமொழியை
சொல்லிக்கொள்வதுடன் மேலும் எனது
தந்தையின் ஜனாஸாவை
பார்வையிட்டு எங்களுக்கு ஆறுதல் அளித்த ஐனாதிபதி,பிரதமர்,அனைத்து
அமைச்சர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் மற்றும்
உலமாக்கள்,என்
அன்பிலும் மேலானபோராளிகள்,
அனைத்து
இன உறவுகளுக்கும்
என் மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்கள்
சகோதரன்
ரஹ்மத் மன்சூர்...
எனது உயிரிலும் மேலான எனது அன்புத் தந்தை எங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு இறையடி எய்து விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று தினம் தினம் எங்களுக்கு கற்றுத் தந்தவர், தனது மெளத்தின் மூலமும் " வாழ்ந்தால் இப்படி தான் வாழ்ந்து மடிய வேண்டும்" என்ற சிறந்ததொரு பாடத்தினை கற்று தந்து விட்டு சென்று விட்டார்.
தன் மக்கள், தன் மண் என்று இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர், அதே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அதே மண்ணில் சங்கம்மானார். அல்லாஹ் எனது தந்தைக்கு அந்த பாக்கியத்தை வழங்கி விட்டான். அல்ஹம்துலில்லாஹ!
எனது தந்தையின் ஜனாசாவில் கலந்து கொண்ட மற்றும் பல வகைகளிலும் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல அளித்த அனைவருக்கும்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
யா அல்லாஹ்! சுவனத்தில் ஓர் உயர்ந்த இடத்தை என் அன்புத் தந்தைக்கு கொடுத்தருள் நாயனே! ஆமீன்!!
மகள் மர்யம் நளிமுதீன்
0 comments:
Post a Comment