முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மஜீதின் செய்தியின்படி
மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் முஸ்லிம் காங்கிரஸில்
இணைந்து கொண்டவரா?
பாராளுமன்றத்தில் தலைவர் ஹக்கீம்
தெரிவித்த விடயம் பொய்யா?
முன்னாள்
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
முஸ்லிம் காங்கிரஸில்
இணைந்து கொண்டவரா? அல்லது தேசிய ஐக்கிய முன்னணியில்
இணைந்து கொண்டவரா? என்பதில் உள்ள
உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அன்னாரின் அபிமானிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் மன்சூர் அவர்களின் மரணம் குறித்து
வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளை பின்னாட்களில் ஏற்றுக் கொண்ட
முன்னாள் அமைச்சர் மன்சூர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 2000.09.14
ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் எமது தேசிய ஐக்கிய முன்னணியில் ஐக்கிய
தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இணைந்து கொண்டுள்ளார்
எனத் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
ஹக்கீம் தெரிவித்த இது தொடர்பான விடயம் சரியா? இல்லை அப்துல் மஜீத் அனுதாபச் செய்தியில்
தெரிவித்த விடயம் சரியா?
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூர்
தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்ததாகக் கூறியுள்ளார். கட்சியின் தவிசாளரோ அன்னார் முஸ்லிம்
காங்கிரஸில் இணைந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதோ....
2000.09.12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் முஸம்மில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் நஸீர் ஆகியோர்களோடு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கொழும்பு வீட்டுக்குச் சென்று மன்சூர் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களும் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதன் பின்னர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களைப் பார்த்து “காக்கா (நானா) உங்களின் அரசியல் கொள்கைதான் முற்றிலும் சரி. எல்லா இனத்தவர்களையும் அனைத்துச் செல்கின்ற உங்களின் செயல்பாடுதான் தற்போது நாட்டிற்குத் தேவை. அதனை நான் தற்போது உணர்ந்துவிட்டேன். அதன் நிமிர்த்தம் நான் தற்போது தேசிய ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியை ஆரம்பித்துள்ளேன். எங்களோடு நீங்களும் உங்கள் மகன் றஹ்மத் மன்சூரும் இணைந்து கொள்ள வேண்டும். கட்சிக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. எங்களோடு நீங்கள் இருந்தால் அதுவே போதும். உங்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்துக்கு எப்பாடு பட்டாவது உங்களை ஒரு பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்பி அதன் மூலம் நான் சந்தோஷப்படுவேன்”. என்று கூறுகின்றார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளை மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார். இதுவே மர்ஹும் மன்சூர் அவர்கள் தேசிய ஐக்கிய
முன்னணியில் இணைந்ததற்கான காரணமாகும்.
2000.09.14 ஆம் திகதி
வியாழக்கிழமை பாராளுமன்றத்தில். . . . . . .
அன்று
குழுக்களின் பிரதித் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் செயலாளர்
நாயகம் இன்று
கட்சியின் தலைவர்
ரவூப் ஹக்கிம்
அவர்கள்,
கெளரவ
பிரதி சபாநாயகர்
அவர்களே!
இன்னும் மகிழ்ச்சியான ஒரு விடயத்தை பேசிவிட்டு
எனது உரையை
முடித்துக்கொள்கின்றேன். எமது தேசிய
ஐக்கிய முன்னணியில்
ஐக்கிய தேசியக்
கட்சியின் முன்னாள்
அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
அவர்கள் இணைந்து
கொண்டுள்ளார் என்ற நற்செய்தியை இந்த
சபைக்கு அறிவிக்க
விரும்புகின்றேன்.
0 comments:
Post a Comment