சர்வதேச மட்ட புத்தாக்குனர் போட்டியில் கலந்து கொள்ளும்
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி மாணவர்கள்
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி மாணவர்கள் சர்வதேச மட்ட புத்தாக்குனர் போட்டிக்கு செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1. அப்துல் மஜீட் முஹம்மட் சௌபாத் (உயர்தர உயிர்முறைமை தொழில் நுட்ப பிரிவு)
2. சமூன் முஹம்மட் அஜாத் (தரம்:- 8 )
ஆகிய மாணவர்கள் இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இனைந்து நடாத்திய Innova Minds-2017. இலங்கையிலுள்ள பாடசாலைகளில் உள்ள அதிவிஷேட புத்தாக்கங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியில் வெற்றி பெற்று. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச புத்தாக்குனர் மட்ட போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.
இவர்கள் அப்போட்டியில் வெற்றி பெற்று எமது நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துக்களை. இம் மாணவர்களுக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் மற்றும் புத்தாக்குனர் கழகம் , தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment