நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான
அரிசி கையிருப்பில் இருப்பதாக தெரிவிப்பு
நாட்டில்
மூன்று மாதங்களுக்கு
தேவையான அரிசி
கையிருப்பில் உள்ளதாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின்
செயலாளர் சிந்தக
எஸ் லொக்குஹெட்டி
தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலும்,
மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய
அரசாங்கம் ஏற்பாடு
செய்துள்ளது.
தனியார்
துறையினர் கடந்த
வாரத்தில் 13 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை
இறக்குமதி செய்துள்ளனர். மூன்று இலட்சம்
மெற்றிக் தொன்
அரிசியை இறக்குமதி
செய்ய அரசாங்கம்
எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த திரு.லொக்குஹெட்டி இதில்
50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை
உடனடியாக இறக்குமதி
செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு
மொத்த விற்பனை
நிலையம் இந்தியாவில்
இருந்து அரசியை
இறக்குமதி செய்ய
நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் தேவையான அளவு அரசி
உள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment