பனை பொருட்கள் உற்பத்திக் கிராம அங்குராப்பண நிகழ்வு
அமைச்சர் ரிஷாட் பிரதம அதிதியாக கலந்து
சிறப்பித்தார்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நறுவிலிக்குளம் பனை பொருட்கள் உற்பத்திக் கிராம அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (29) கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பனைபொருள் உற்பத்திக் கிராமம் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடையவுள்ளனர். இதன் போது உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்களும் தையல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண கைத்தொழில் அமைச்சர் பா. டெனீஸ்வரன், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் ஹேஷானி போகொல்லாகம, அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர்களான திரு. ஜோர்ஜ், அலிகான் ஷரீப், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்டான்லி டிமெல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment