நல்லூர் துப்பாக்கிப் பிரயோக சம்பவம்

எதிர்பார்க்கப்படாத சம்பவம்

                  - பொலிஸ் ஊடக பேச்சாளர்


நல்லூர் பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் எதிர்பார்க்கப்படாத ஒரு சம்பவம் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
 இது மேல்நீதிமன்ற நீதிபதியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல என்பதும் ஆரம்ப விசாரணையிலிருநது தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர சம்பவம் இடம்பெற்ற தினம் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டமையும் இதற்குக்காரணமாகும்.
 சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடத்தில் மூவர் மது பானம் அருந்தியுள்ளனர்.இதன் பின்னர் முச்சக்கர வண்டிகள் நின்றுகொண்டிலுந்த இடத்திற்கு இவர்கள் வந்துள்ளனர்.அங்கிருந்தவர்களுடன்  இவர்கள் வாக்குவாதப்பட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தினால் தான் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பதும் விசாரணைகளிலிருந்து தொயவந்துள்ளது என்றும் பேச்சாளர் கூறினார்
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ்மாஅதிபர் இதனை விசாரணை செய்வதற்காக இரண்டு குழுக்களை நியமித்துள்ளார். வட பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைக்கான அறிக்கை நாளை கையளிக்கப்படும். மேல் நீதிமன்ற நீதிபதி இந்த சந்தர்ப்பத்தின் போது நல்லூர் பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளார்.
 நீதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் முன்னோக்கி பயணித்தார். மற்றுமொரு அதிகாரி நீதிபதி பயணித்த வாகனத்தில் இருந்துள்ளார். நல்லூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாகனத்தில் இருந்து இறங்கி நீதிபதியின் வாகனத்திற்கு தடை ஏற்படாது முன்னோக்கிச் செல்ல வழி வகை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட முக்கிய சந்தேக நபர் அவ்விடத்திற்கு வருகை தந்து பொலிசாரின் கைத்துப்பாக்கியைப் பறித்து அந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி அங்கு வந்துள்ளார். இதன் போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி அந்த இடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
 பொலிசார் இருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை வாகனத்தில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சரத் பிரேமச்சந்திர உயிரிழந்துள்ளார். 51 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிலாபத்தைச் சேர்ந்தவர். மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சுகமடைந்து வருகிறார். இதன் போது மதுபோதையில் இருந்த மூன்று நபர்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இவர்கள் மத்தியில் முன்பு இருந்த பிரச்சினையே இதற்குக் காரணம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருள் ஒருவர் முக்கிய சந்தேக நபரின் சகோதரராவார். மற்றவர் இவரது உறவினர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டியாளர்களுக்கும் சந்தேக நபர்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் குரோதமே மோதலு;ககுக் காரணம் என்பது விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளதுமுக்கிய சந்தேக நபரை கைது செய்வதில் பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top