வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும்
இனவாத ஆர்ப்பாட்டமும்.
தமிழ் சகோதரர்களின் மீள் குடியேற்றத்துக்கு
முன்னுரிமை தந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
இன்று இனவாதியாக தெரிகிறார்.
1990ம் ஆண்டு விடுதலைப்
புலிகளால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அகதிகளாக புத்தளம் உட்பட
நாட்டின் பல பகுதிகளில் குடியேறி வழ்ந்து வந்தார்கள்.
தனிநாடு கேட்டுப் போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான
போர் முடிவடைந்த பின்னர் அரை நூற்றாண்டு கால அகதிவாழ்க்கை வழ்ந்த மக்கள் மீண்டும் தமது
தாயக பூமியில் குடியேற ஆரம்பித்திருக்கும் நிலையில் இன்று இனவாத சக்திகளின் கையாட்களாக
இருக்கும் வன்னி அரசியல் தலைமைகள் அதை தடுக்கின்றனர் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.
இனவாதத்தின் உச்சகட்டம் நேற்றைய தினம் மீள குடியேறும் மக்களுக்கு
எதிராகவும் அந்த மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு
எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது வேதனையானதும் கண்டிக்கதக்க விடயமாகும்.
அந்த மக்கள் பரம்பரையாக வாழ்ந்த இடம் அது புலிகள் இருந்த காலத்தில்
தங்களை பாதுகாத்துக் கொள்ள பதுங்கி இருக்க தங்களின் தலை நகராக பாவித்து வந்த இடம்தான்
முல்லைத்தீவு அவர்கள் அங்கு காடுகளை உருவாக்கினார்கள் புலிகள் யுத்ததின் பின்பு அங்கு
குடியேற செல்லுகின்ற முஸ்லிம் மக்கள் தங்களின் சொந்த இடத்தை துப்பரவு செய்வதை காடழிப்பாக
இந்த இனவாத சக்திகள் காட்டமுனைவது வேதனைதரும் விடயமாகும்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் குடியேற்றம் செய்கிறார் காடழிப்பு
செய்கிறார் என்று சொல்லும் இனவாத சிந்தனையாளர்களே யுத்தம் முடிந்த உடன் தமிழ் மக்களை
முதலில் காடழித்து மீள்குடியேற்றம் செய்ய வில்லையா?? உங்கள் குடியேற்றத்துக்கு அவர்
மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து அடிப்படை வசதிகள் செய்து தந்து உதவ வில்லையா?? அப்போது
முஸ்லிம் மக்கள் இனவாத சிந்தனையில் பார்க்க வில்லை தமிழ் சகோதர இனமாகதான் பார்த்தோம்.
அவ்வாறு உங்கள் மீள் குடியேற்றத்துக்கு முன்னுரிமை தந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
இன்று இனவாதியாக தெரிகிறார்.
அங்கு குடியேறிவரும் மக்கள் வெளிநாட்டு மக்களே வெளிமாவட்ட மக்களே
அல்ல அந்தமாவட்டத்தில் புலிகளால் வெளியேற்றப்பட முன்னார் வாழ்ந்த மக்களும் அவர்களின்
வாரிசுகளும் தான்.
இனவாத சிந்தனையிலும் தமது அரசியல் இருப்பை பாதுகாக்க இனவாதம்
பேசும் தமிழ் அரசியல் தலைமைகள் எங்கள் மக்களின் மீள் குடியேற்றத்தை தடுக்காமல் உதவி
செய்யுமாறு கேட்கின்றோம்.
தமிழ் இளைஞ்சர் யுவதிகளை தூண்டிவிட்டு சகோதர உறவுகளுக்குள் பிரிவை
ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக வடக்கில் வாழவிடுங்கள் என்றுகேட்கின்றோம்.
- ஏ.எம்.றிசாத்-
0 comments:
Post a Comment