அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வரைந்த ஓவியம் 29,184 டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மான்ஹாட்டனில் உள்ள பெரியளவிலான கட்டிடங்களை குறிக்கும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் ஒரு ஓவியத்தை வரைந்தார்.
டிரம்பின் படைப்பில் அவருக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் இந்த ஓவியம் முதன் முதலில் விற்பனைக்கு வந்தது
ஓவியத்தை ஏலத்தில் வாங்கிய நபர் பின்னர் அதை நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் கைமாற்றியுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் அந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது. 9,000 டொலருக்கு ஆரம்பத்தில் கேட்கப்பட்ட டிரம்பின் ஓவியம் இறுதியாக 29,184 டொலர்களுக்கு விற்கப்பட்டது.
ஏற்கனவே டிரம்ப் பயன்படுத்திய ஃபெராரி கார் மற்றும் அவர் கையெழுத்திட்ட மது பாட்டில் ஒன்றும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment