நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள
பாடசாலை சீருடையில் மாற்றம்?
நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பாடசாலை சீருடையில் மாற்றம் செய்யுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய ஆவணங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கை கால்களை மறைக்கும் வகையில் நீளக் காற்சட்டை, கை நீள சேர்ட் உள்ளிட்ட ஆடைகளை பாடசாலை மாணவர்கள் அணிந்து செல்ல அனுமதிக்கப்படும்.
சீருடையின் நிறத்தை பாடசாலை அதிபர்கள் நிர்ணயம் செய்ய முடியும்.
இதுவரையில் பதிவான டெங்கு நோயாளிகளில் 30 வீதமானவர்கள் பாடசாலை மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயன்படுத்தப்படும் சீருடைகளை விடவும் வேறு ஆடைகளை அணிவதன் மூலம் நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை டெங்குவை ஒழிப்பதனை விடுத்து இவ்வாறு சீருடையில் மாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment