கவிப்பேரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் பரிசாக ஆடு வழங்கப்பட்டது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவர் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் இதனை பெற்றுக் கொண்டார்.
இதை தன் தோட்டத்தில் வளர்க்கப் போவதாக உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார். இந்த ஆடு நீண்ட தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கெங்குவார் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் தனது தோட்டத்து பங்களாவில் இலக்கிய ரசிகர்களுக்கும் குடும்ப நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்தார் வைரமுத்து. புத்தகம், பேனா, மலர்செண்டு, மலர் மாலை, பொன்னாடை என பலரும் பலவிதமான அன்பளிப்புகளை வழங்கி, வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த தருணத்தில் தஞ்சையில் இருந்து வந்திருந்த, இவரது குடும்ப நண்பரும் வெற்றித் தமிழர் பேரவையின் துணைப்பொதுச் செயலாளருமான செழியன், ஆடு ஒன்றை வழங்கி வைரமுத்து உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவரது உயரிய நோக்கத்தை பலரும் பாராட்டுகிறார்கள். மரம் வளர்ப்பு அரிதாகிக் கொண்டிருந்த தருணத்தில் சுற்றுச்சூழலில் அக்கறையுள்ளவர்கள் விழாக்களில் அன்பளிப்பாக மரக்கன்று கொடுக்கும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தார்கள். அதுபோல் அன்பளிப்பாக கால்நடைகள் கொடுக்கும் கலாச்சாரம் இனிவரும் காலங்களில் தழைத்தோங்கட்டும்.
வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.