டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங்:

இலங்கை சாதனை


சிம்பாப்வேக்கு எதிரான 391 ஓட்டங்களை சேஸிங் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 388 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆட்டமிழக்காமல் 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறேம் கிறீமர் 4 விக்கெட்டுகளையும் ஷோன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, அசேல குணரட்ன தெரிவானார்
கொழும்பில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ஓட்டங்கள் இலக்காக நி்ர்ணயித்தது ஜிம்பாப்வே. இந்த இலக்கை இலங்கை அணி 114.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 391 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக சேஸிங் செய்தது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதற்கு முன் 2003-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7 விக்கெட் இழப்பிற்கு 418 ஓட்டங்கள் குவித்ததுதான் மிகப்பெரிய சேஸிங் ஆகும். அதன்பின் 2008-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 418 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 1976-ல் இந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 406 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 1948-ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 391 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


ஆசிய மண்ணில் இதுதான் மிகச்சிறந்த சேஸிங் ஆகும். 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 387 ஓட்டங்களை சேஸிங் செய்துள்ளது. பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக 2015-ல் 377- ஓட்டங்களை சேஸிங் செய்துள்ளது. 2006-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை 352- ஓட்டங்களை சேஸிங் செய்துள்ளது. 1998-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை 326 ஓட்டங்களை சேஸிங் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top